ஜப்பானில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் ஹிரோஷிமா மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகள் கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அங்கு ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் அந்த பகுதியில் வீடுகளும், கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
புதைந்து போனவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவகின்றது. எனினும் கன மழை தொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.