பெய்ஜிங், ஆகஸ்ட் 26 – சீனா, அதிவேகமாக பயணம் செய்யக்கூடிய ‘சூப்பர் சோனிக்’ நீர்மூழ்கி கப்பல் ஒன்றை தயாரித்துள்ளது. தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக சீனா முன்னேறி வருகின்றது.
உலகின் அதிவேக இரயில்கள், மின்னணு பொருட்கள் என பல துறைகளில் சீனா கால் பதித்துள்ள நிலையில், அந்நாட்டின் ஹார்பின் பல்கலைகழகத்தின் நிபுணர்கள் வடிவமைத்துள்ள சூப்பர் சோனிக் கப்பல் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நீர் மூழ்கி கப்பல், மணிக்கு 70 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன்படைத்தது. இந்த கப்பல் மூலமாக சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு 2 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும்.
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சான்பிரான்சிஸ்கோவிற்கும், சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்காய்க்கும் இடையேயான மொத்த தூரம் 9,873 கி.மீட்டர் ஆகும்.
மிகக் குறைந்த நேரத்தில், இந்த தூரத்தை கடக்க முடியும் என்பதால் சீனாவின் இந்த தயாரிப்பு அமெரிக்காவை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த புதிய சூப்பர் சோனிக் கப்பல் பற்றி ஹார்பின் பல்கலைகழகத்தின் பேராசிரியர் லீ பெங்சன் கூறுகையில்,
“ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருந்த போது, சீனாவிற்கு எதிராக மணிக்கு 370 கி.மீ வேகத்தில் பயணம் செய்யக்கூடிய அதிநவீன நீர் மூழ்கி கப்பல் ஒன்றை தயாரித்தது. அதுவே இந்த ‘சூப்பர் சோனிக்’ நீர்மூழ்கி கப்பல் உருவாக்க தூண்டுகோலாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.