தமிழ் திரைப்படங்களில் திரிஷா இழுத்து போர்த்தி, கண்ணியமாக நடித்துவரும் நிலையில், கன்னட ரசிகர்களுக்கு மட்டும் மனதை தாராளமாக்கியுள்ளார் திரிஷா.
அஞ்சான் படத்தில் சமந்தா நீச்சல் உடை அணிந்த பரபரப்பு ஓய்வதற்குள், திரிஷா நீச்சல் உடையில் நடித்திருப்பதுதான் திரையுலகில் இப்போது சிறப்புச் செய்தியாக மாறிப்போயுள்ளது.
அஞ்சான் படத்தில் சில நொடிகள் சமந்தா நீச்சல் உடையில் வந்தாலும், அதுதான் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. திரிஷா முதன்முறையாக ‘பவர்’ என்ற கன்னடப்படத்தில் நடித்துள்ளார்.
படம் பெயரே ஒரு மார்க்கமாக இருப்பதைபோல, திரிஷாவும் இதில் கவர்ச்சி காண்பித்துள்ளதாக கிசுகிசுக்கின்றனது கன்னட திரையுலகம்.
இந்த திரைப்படத்தில், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
திரையுலகில் நீண்ட நாட்களாக கதாநாயகிகள் உலா வரும் திரிஷாவுக்கு ‘பிகினி’ நீச்சல் உடை, மற்றொரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.