Home உலகம் புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பின் திருமணம் – இம்ரான் கானின் கனவு

புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பின் திருமணம் – இம்ரான் கானின் கனவு

529
0
SHARE
Ad

imran_khan_01பாகிஸ்தான், ஆகஸ்ட் 26 – தனது கனவான புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பிறகு மறுமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி இம்ரான் கான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தொண்டர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன் கடந்த சில நாட்களாக முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அவர்கள் மத்தியில் தினமும் இரவில் இம்ரான்கான் உரையாற்றுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,

“புதிய பாகிஸ்தானை உருவாக்குவதுதான் எனது கனவு. இது உங்களுக்காக மட்டுமல்ல எனக்காகவும்தான். புதிய பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு நான் மறுமணம் செய்து கொள்வேன்” என அவர் தெரிவித்தார்.

imran-khanஇதனை அவர் தெரிவிக்கும் போது, ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பரித்து வரவேற்றனர். இம்ரான்கான் 1995-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கோல்டுஸ்மித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு பிரிந்தனர். இத்தம்பதிக்கு சுலைமான், காசிம் என இரு குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளும் தாயுடன் பிரிட்டனில் வசித்து வருகின்றன.

62 வயதாகும் இம்ரான்கானுக்கு பெண்களுடன் உள்ள சகவாசம் குறித்து சமூக இணையதளங்களில் மோசமான கருத்துகள் பரவி வருகின்றன. இந்நிலையில் அவர் மறுமணம் குறித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.