Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் இந்தியா விமான கட்டணம் 100 ரூபாய் மட்டுமே!

ஏர் இந்தியா விமான கட்டணம் 100 ரூபாய் மட்டுமே!

458
0
SHARE
Ad

15-airindia-flight-6001புதுடெல்லி, ஆகஸ்ட் 27 – ஏர் இந்தியா விமானம் இன்று (ஆகஸ்ட் 27) முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சலுகைக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்துள்ளது.

ஆகஸ்ட் 27-ம் தேதியை ஏர் இந்தியா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு சலுகை கட்டணத்தை தொடங்கியுள்ளது.

இந்த சலுகை திட்டத்தின்கீழ் 100 ரூபாய்க்கு பயனச்சீட்டு (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 31-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் இந்த சலுகை பயனச்சீட்டு விற்பனை செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இச்சலுகைக் கட்டணம் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.