Home உலகம் எரிபொருள் தீர்ந்ததால் வெடித்துச் சிதறும் நாசாவின் செயற்கைக் கோள்!

எரிபொருள் தீர்ந்ததால் வெடித்துச் சிதறும் நாசாவின் செயற்கைக் கோள்!

532
0
SHARE
Ad

nasaவாஷிங்டன், ஆகஸ்ட் 27 – எரிபொருள் தீர்ந்து போனதால் நாசாவின் செயற்கைக் கோள் ஒன்று வானில் வெடித்துச் சிதறவிருக்கிறது. இதனால் பூமிக்கு பாதிப்பு இருக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.

1997-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிலிருந்து மழைப்பொழிவின் அளவு பற்றி அறிவதற்காக விண்ணில் ஏவப்பட்டது தி டிராபிக்கல் ரெயின்பால் மெஷரிங் மிஷன் (டி.ஆர்.எம்.எம்) செயற்கைக்கோள்.

வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இது, விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்துள்ளது. குறிப்பாக, இதுவரை மழைக்கால சூறாவளிகள், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வறட்சி போன்றவற்றை மிகத்துல்லியமாக பலமுறை கணித்து தந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் தற்போது 17 ஆண்டுகளை விண்வெளியில் கழித்துவிட்டது. இந்நிலையில், அந்த செயற்கைக்கோளின் எரிபொருள் காலியாகும் நிலையில் உள்ளது.

sat1imageஅதை சுற்று வட்டப்பாதையிலேயே வைத்து நிரப்ப எந்த வழியும் இல்லை என்று நாசா கைவிரித்துவிட்டது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழுந்துவிடும் என நாசா தெரிவித்துள்ளது.

முதலில் கீழ் வட்டப் பாதையை நோக்கி வரும் எனவும், பின்னர் பூமியை நெருங்க நெருங்க வெடித்து சிதறி சிறு சிறு துண்டுகளாக விழுந்துவிடும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால், பூமியில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது நாசா.