பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது.
இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7.5 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதேபோல் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ‘ஆதார்’ அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை.
வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு பணம் பறிமாற்று அட்டை (ஏ.டி.எம். கார்டு) வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள பணம் எடுக்கும் இயந்திரங்களில் (ஏ.டி.எம்) பணம் எடுத்துக்கொள்ளலாம்.
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து, பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதை அமல்படுத்துவதற்கான சில வழிமுறைகளை அங்கீகரிக்கவும் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்த திட்டத்தின் இயக்குனராக, தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குனரை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ‘ருபே கிஷான்’ அட்டைகளை வழங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.