இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை பரிந்துரைக்கப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளோம். காரணம் அந்த இடம் பிகேஆர் கட்சிக்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு மரியாதை அளிக்கின்றோம். நாங்கள் எங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை முன்மொழிவது தவறு” என்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முஸ்தபா தெரிவித்தார்.
அடுத்த புதன்கிழமைக்குள் பாஸ் அந்த பெயர்களை அரண்மையில் சமர்ப்பிக்கும் என்றும், அதை தற்போது வெளியிட முடியாது என்றும் முஸ்தபா குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் தலையிட்ட சுல்தான், காலிட் இப்ராகிமை பதவி விலகும் படி அறிவுறுத்திய பின்னர், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வரும் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் பெயர்களை கட்சிகள் முன்மொழிய வேண்டும் என்றும் சுல்தான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.