Home உலகம் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – இலங்கை முதல்வர் விக்னேஸ்வரன்!

மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – இலங்கை முதல்வர் விக்னேஸ்வரன்!

649
0
SHARE
Ad

vigneswaran-2கொழும்பு, ஆகஸ்ட் 28 – இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா வந்தனர். டெல்லியில் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள்.

மோடியை சந்தித்த போது, இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். இதுபற்றி இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் மோடி பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அப்போது இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொடுத்தனுப்பிய மனுவையும் தமிழ் எம்.பி.க்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட மோடி தமிழ் எம்.பி.க்கள் மூலம் விக்னேஸ்வரனை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

#TamilSchoolmychoice

Wigneswaran-4இந்த அழைப்பை விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார். வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய பிரதமரின் முறைப்படியான அழைப்பு கிடைத்தவுடன் தாம் உடனடியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.