அந்தச் சந்திப்பின்போது, சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், தென்ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் துன் சாமிவேலு, துணை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான் ஆகியோரும் உடனிருந்தனர்.




இதற்கிடையில் பிரதமருடனான தனது இலங்கை வருகை மற்றும் இலங்கை வடமாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட டாக்டர் சுப்ரா, யாழ்ப்பாணம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்புப் பணிகளில் மலேசியா எவ்வாறு உதவ முடியும் என்பதை ஆராய முதல் கட்டமாக மலேசிய அரசாங்கத்தின் அதிகாரத்துவக் குழு ஒன்றை அனுப்ப பிரதமர் பரிசீலிப்பதாக உறுதி கூறியுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறார்.