Home நாடு ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்

ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்

946
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ ஒன்றின் தலைவன் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

இரு இரகசிய கும்பல்களுக்கு இடையிலான மோதல் காரணமாக, பழிக்குப் பழி வாங்க இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும், அந்த இரு இரகசிய கும்பல்களின் பெயர்களை சாஹிட் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

இக்கொலையை விசாரணை செய்ய தங்களிடம் சிறப்புப் படைப்பிரிவு இருப்பதாகவும், அதன் மூலம் இக்கொலைச் சம்பவம் விசாரணை செய்யப்படும் என்றும் சாஹிட் தெரிவித்திருக்கிறார்.