வாஷிங்டன், பிப்.22- அமெரிக்க மக்கள் தொகையில், அங்கு வாழும் 30 லட்சம் இந்தியர்களில், 8.2 சதவீதம் பேர், ஆண்டுக்கு, 12 லட்ச ரூபாய் கூட சம்பாதிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
கடந்த, 2007 – 2011ம் ஆண்டிற்கான, அமெரிக்க சமுதாய ஆய்வறிக்கையை, மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்காவில் வசிக்கும் பல இனங்களை, நாடுகளை சேர்ந்தவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்நாட்டை பொறுத்த வரை, ஆண்டுக்கு, 12 லட்ச ரூபாய் வருமானம் இல்லாதவர்கள், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களாக கருதப்படுவர்.
அந்த வகையில், அமெரிக்காவில் வாழும், 30 லட்சம் இந்தியர்களில், 8.2 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில் இந்தியர்களை போலவே, அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்களில், 8.2 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர்.
வியட்னாம் மக்கள், 14.7 சதவீதம், கொரியர்கள், 15 சதவீதம், பிலிப்பைன்ஸ் மக்கள், 5.8 சதவீதம் பேர் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளனர்.
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்றில்லாமல், பொதுவாக வறுமையால் பாதித்த, இரண்டு இனங்கள் என்ற வகையில், அமெரிக்கா வாழ் இந்தியர்களும், அலாஸ்காவை பூர்வீகமாக கொண்டவர்களும், 27 சதவீதம் பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்களில், 25.8 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் உள்ளனர்.