Home கலை உலகம் இயக்குநர் பாலா – நடிகை பூஜாவிற்கு முத்தமழை!

இயக்குநர் பாலா – நடிகை பூஜாவிற்கு முத்தமழை!

1115
0
SHARE
Ad

Untitledசென்னை, ஆகஸ்ட் 30 – இயக்குநர் பாலாவும் – நடிகை பூஜாவும் முத்தத்தை பறிமாறிய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது இயக்குநர் பாலாவா இப்படி என பலராலும் நம்ப முடியவில்லை.

காரணம் இயக்குநர் பாலா மீது அப்படி ஒரு நம்பிக்கை. ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று வெளியாகியுள்ளன.

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தவர் பூஜா. அதற்கு முன் வரை சுமார் நடிகையாக இருந்தவரை, சூப்பர் நடிகையாக்கியது நான் கடவுள் படம் தான். பின்னர் பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏனோ மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

ஆனால், பாலா எப்போது அழைத்தாலும் நடிப்பேன் என்று சமீப காலமாக சொல்லிக் கொண்டிருந்தார் பூஜா. இந்த முத்தச் சம்பவம் எங்கே எப்போது நிகழ்ந்ததெனத் தெரியவில்லை.