செப்டம்பர் 5 – பதினாறு முழம் கொண்ட சேலைகளோடு, உடலின் எந்தப் பாகத்தையும வெளியே காட்டாமல் பெண்கள் பாந்தமாக சேலை கட்டி வந்தது ஒரு காலம்.
இன்றோ, உலகிலேயே கவர்ச்சியான ஆடை சேலைதான் என பலரும் அடித்துக் கூறும் அளவுக்கு, சேலை பல்வேறு வடிவங்களில் பெண்களின் அழகை எடுத்துக் காட்டும் வண்ணம் காட்டப்படுகின்றது – மன்னிக்கவும் கட்டப்படுகின்றது.
சில சமயங்களில் இப்படியெல்லாம் சேலையைக கட்ட முடியுமா என மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பெண்கள் சேலையை உடுத்திக் காண்பித்து விடுகின்றார்கள்.
கடந்த மாதம் மும்பாயில் நடைபெற்ற லக்மே அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்தின் ஆடை அலங்கார அணிவகுப்பில், இந்தியாவின் பிரபல மாடல் அழகிகள் விதம் விதமாக – வித்தியாச கோணங்களில் சேலை கட்டி வந்து அழகு பவனி நடத்தினர்.
அந்தக் காட்சிகளில் சில இங்கே:
வித்தியாசமான சேலைக் கட்டில் அழகி ஒருத்தியின் பவனி….
இந்திய ஆடை வடிவமைப்பாளர் சஷிகாந்த் நாயுடுவின் கைவண்ணத்தில் உருவான எளிமையும் கவர்ச்சியும் கலந்த சேலைக் கட்டு…
வித்தியாசமான வண்ணம் – பக்கங்களில் தொங்கும் குஞ்சம் – என இன்னொரு வித்தியாசம்…
இது இந்திய ஆடை வடிவமைப்பாளர் வைஷாலி ஷடங்குலே என்பவரின் கற்பனையிலும், கைவண்ணத்திலும் உதித்த வடிவம்…
சிவப்பு வண்ண சேலையை வித்தியாசமான பாணியில் உடுத்தி அழகு காட்டும் அலங்கார அழகி…
படங்கள் : EPA