மும்பாய் – இந்தியாவின் பிரபலமான அழகு சாதன நிறுவனம் லக்மே (Lakme). அந்த நிறுவனம் ஆண்டுதோறும் இந்தியாவின் மும்பாய் நகரில் நடத்தும் ஆடை அலங்கார வாரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த அலங்கார அணி வகுப்பில் வித்தியாச ஆடைகளோடு வலம் இந்திய விளம்பர (மாடல்) அழகிகளின் வரிசையை இங்கே காணலாம்:
இந்திய ஆடை அலங்கார வடிவமைப்பாளர் சுனித் வர்மாவின் வித்தியாச சேலை வடிவம் இது
சுனித் வர்மாவின் சிந்தனையில் உருவான மற்றொரு வித்தியாச வடிவம் இது
வலது புறம் கவர்ச்சியும் நவீனமும் கலந்த ஆடையோடு நிற்பவர் பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி. இந்த அழகிகள் அணிந்திருக்கும் ஆடைகளும் சுனித் வர்மாவின் வடிவமைப்பில் உருவானவையாகும்.
வித்தியாசமான ஆடை அலங்காரத்தை பார்வையாளர்களுக்கு எடுத்துக் காட்டும் அழகி ஒருத்தி
இந்திய ஆடைகள் மட்டுமின்றி, நவீன ஆடைகளின் அரங்கேற்றமும் லக்மே ஆடை அலங்கார பவனியில் உலா வந்தன. இந்த ஆடை இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கஜ் மற்றும் நித்தி ஆகியோரின் கைவண்ணத்தில் உதித்தது இந்த நவீன ஆடை.
பெண்களின் காதுகளில் பாம்படம் தொங்குகின்ற காலம் மாறிவிட்டது. இருப்பினும் நீண்டு தொங்கும் காதணிகளை அலங்காரமாக அணியும் வழக்கம் இன்னும் தொடர்கின்றது. அலங்கார பவனியில் அழகு காட்டும் அழகி ஒருத்தி…
இந்திய வடிவமைப்பாளர் நிஷ்கா லல்லா கைவண்ணத்தில் உருவான நீல நிற கவர்ச்சி ஆடையை அணிந்து காட்டும் மாடல் ஒருவர்.
இந்திய ஆடை அலங்கார வடிவமைப்பாளர்களும் இப்போதெல்லாம் கவர்ச்சியைக் கலந்து ஆடைகளை வடிவமைக்கின்றார்கள். நிஷ்கா லல்லா என்ற வடிவமைப்பாளரின்
நிஷ்கா லல்லாவின் வடிவமைப்பில் உருவான மற்றொரு ஆடையை அணிந்து வலம் வரும் அழகி…