Home நாடு “மூவினம் சேர்ந்த முயற்சியில் கிடைத்ததே சுதந்திரம்” – கவிஞர் பழனிசாமி

“மூவினம் சேர்ந்த முயற்சியில் கிடைத்ததே சுதந்திரம்” – கவிஞர் பழனிசாமி

1237
0
SHARE
Ad

pic_article_0711_4_1கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியாவின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேராக் மாநிலத்தை சேர்ந்தவரும், கவிஞருமான கே.பழனிசாமி நமது செல்லியல் இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ள பிரத்தியேக கவிதை இதோ…

காடுகள் அழித்தோம்… கன்றுகள் நட்டோம்…

சாலைகள் போட்டோம்… சோலைகள் அமைத்தோம்…

#TamilSchoolmychoice

மூவினம் சேர்ந்து கடும் முயற்சிகள் செய்தோம்…

முடிவில் கிடைத்ததே சுதந்திரம் அன்று …

 

நாடும் வளர்ந்தது…. நகரம் பெருகியது….

ஊரும் மெச்சியது…. உலகம் போற்றியது….

பார் போற்றும் பெருமை தேசமாய்

மலேசியா இன்று வளர்ந்து நிற்கின்றது….

 

சுதந்திரம்…

இனத்திற்கு அப்பாற்பட்டது…

மொழிக்கு அப்பாற்பட்டது…

மதத்திற்கு அப்பாற்பட்டது…

மனிதநேயத்தோடு பிணைந்தது…

 

இன்றைய நாளில்…

ஒற்றுமை எங்கும் நிலவி…

ஒருவருக்கொருவர் செய்வோம் உதவி…