Home நாடு “சம்யுக்தா பாப்பாவின் மெர்டேக்கா” – பாடலாசிரியர் யுவாஜியின் சுதந்திர தினக் கவிதை!

“சம்யுக்தா பாப்பாவின் மெர்டேக்கா” – பாடலாசிரியர் யுவாஜியின் சுதந்திர தினக் கவிதை!

1142
0
SHARE
Ad

Yuwajiகோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நாட்டின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான யுவாஜி (படம்), நமது செல்லியலுக்கு அனுப்பியுள்ள பிரத்தியேக கவிதை இதோ….

செவ்வகம் ஒன்றை செவ்வனே வரைந்து 

அதனுள் வெள்ளையும், சிவப்புமாய்

#TamilSchoolmychoice

பதினாங்கு பட்டைகள் வரைந்து…

மஞ்சள் நிறத்தில் அழகான செம்பிறையும்

அலங்கோலமாய் பதினாங்கு முனை 

கொண்ட நட்சத்திரமும் வரைந்து…

பின்னணியில் கருநீல வண்ணம் பூசி…

கத்தரிக்கோலால் அழகாக வெட்டி எடுத்து

வீட்டிருந்த உறிஞ்சு குழாயில் பசைப் பூசி …

தான் வரைந்த மலேசியக் கொடியை
அதில் ஒட்டி..

நள்ளிரவு வரைக் காத்திருந்து …

தன் பிஞ்சுக் குரலில் சம்யுக்தா பாப்பா

மேசை மீது ஏறிக் கத்தினாள்…

மெர்டேக்கா….மெர்டேக்கா….