Home உலகம் இரு மொழிகளைக் கேட்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றலுடன் வளர்கிறார்கள் – ஆய்வு தகவல்

இரு மொழிகளைக் கேட்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றலுடன் வளர்கிறார்கள் – ஆய்வு தகவல்

660
0
SHARE
Ad

4-cute-multilingual-babies-say-helloசிங்கப்பூர், செப்டம்பர் 2 – ஒரே மொழியை கேட்டு வளரும் குழந்தைகளை விட, இரண்டு மொழிகளை கேட்டு வளரும் குழந்தைகளின் கற்றல், நினைவாற்றல் மிகவும் சிறப்பான வளர்ச்சி அடைவதாக சிங்கப்பூரில் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

6 மாதக் குழந்தைகளிடத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரே மொழிகளை கேட்டு வளரும் குழந்தைகளைக் காட்டிலும், இரண்டு மொழிகளை கேட்கும் குழந்தைகள், நன்கு அறிந்த படங்களை விரைவில் அடையாளம் காண்பதாகவும், பரீட்சயமில்லாத புகைப்படங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த குழந்தைகளிடத்தில் வண்ணமயமான கரடி மற்றும் ஓநாயின் படங்களை காட்டும் போது, அதில் பாதிக் குழந்தைகள் கரடியின் படத்தை எளிதில் அடையாளம் கண்டுவிட்டதாகவும், அதே வேளையில் ஓநாயின் படத்தை பாதிக் குழந்தைகள் அடையாளம் காண ஆர்வம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு மொழிகளைக் கேட்டு வளரும் குழந்தைகள், நன்கு அறிந்த படங்களை வெகுவிரைவில் பார்த்து அலுத்து விடுகின்றனர் என்றும், அதே வேளையில், பரீட்சயமில்லாத படங்களை வெகு நேரம் விரும்பி பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மொழியை கேட்டு வளரும் குழந்தைகளை விட, இரண்டு மொழிகளைக் கேட்டு வளரும் குழந்தைகள், கூடுதலாக புதிய தகவல்களை அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இரண்டு மொழிகளைக் கேட்டு வளரும் 6 மாதக் குழந்தைகள், இரண்டு மொழிகளை மட்டும் கற்பதில்லை. மாறாக இரண்டு மொழிகளுக்கு இடையிலான வேற்றுமைகளை அறிய அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களின் எண்ண ஓட்டங்கள் விரிவடைகின்றன. அபார நினைவாற்றலும், புரிந்து கொள்ளும் திறமையும் வளர்ச்சியடைகின்றது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை மையமாகக் கொண்டு செயல்படும் ஆரோக்கிய வாழ்வியலை நோக்கி சிங்கப்பூர் (Growing Up in Singapore Towards Healthy Outcomes) என்ற இந்த ஆய்வுடன் இணைந்து சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கேகே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை (KKH) மற்றும் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் (NUH) ஆகியவை செயல்பட்டன.

இந்த ஆய்வறிக்கை இன்று செப்டம்பர் 2 -ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.