பெய்ஜிங், செப்டம்பர் 3 – ஜப்பானை விட சிறந்த தொழில்நுட்பத்தில் அதிவேக இரயிலை இந்தியாவிற்கு வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம், கட்டமைப்பு, அதிவேக இரயில் (புல்லட் ரயில்) ஆகிய திட்டங்களை ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் மேற்கொள்ள ஒப்பந்தம் ஒன்றை அந்நாட்டு அரசுடன் ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் ஜப்பானைவிட தங்களிடம் அதிவேக இரயிலுக்கான சிறந்த தொழில்நுட்பம் இருப்பதாகவும் இந்தியா சம்மதித்தால், அதனை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாகவும் சீன இரயில் நிர்வாகத்தின் அனைத்துலக இயக்குனர் ஜுகு தெரிவித்துள்ளார்.