கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிர்மியா பகுதியைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனையும் ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என ரஷ்ய ஆதரவு போராளிகள் ஆயுதமேந்தி போராடி வந்தனர். ரஷ்யாவும் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் உக்ரைனின் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரஷ்ய அதிபர் புடினுடன், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவுடன் இணக்கமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.