Home இந்தியா அடுத்த குறி இந்தியா தான்: அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவஹிரி!

அடுத்த குறி இந்தியா தான்: அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவஹிரி!

572
0
SHARE
Ad

zawahiriபுதுடெல்லி, செப்டம்பர் 4 – உலக நாடுகளில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பும் அல்-கொய்தா தீவிரவாதிகள் அடுத்ததாக இந்தியாவை குறி வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் அல்-குவைதாவின் கிளை அமைப்பு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்ற இருப்பதாக அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல் ஜவஹிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 55 நிமிடம் ஓடும் காணொளி ஒன்றில் பேசியுள்ள அவர் கூறியுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“இந்தியாவில் செயல்படும் எங்கள் இயக்கம், இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், ஒடுக்குமுறைகளிலிருந்தும் அவர்களைக் காக்கும்.

புதிதாக முளைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள இளைஞர்கள் சேருவதை தடுக்கவும், எங்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளான்.

சமீபத்தில் இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் என்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் தலைவன் அபு அபு பக்ர் அல்-பாக்தாதி பறைசாற்றியுள்ளதால் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக தனது முதல் அடியை அல்-கொய்தா எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.