சில தினங்களுக்கு முன்புதான் அவர் சென்னை திரும்பினார். மீண்டும் படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ள அவர் தனக்குப் பொருத்தமான கதைகளைக் கேட்டு வருகிறார்.
அவர் வந்திருப்பது தெரிந்ததும் பல பட அதிபர்களும் நெப்போலியனைச் சந்தித்து கதை சொல்ல நேரம் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் அதை சில தினங்கள் தள்ளி வைத்துவிட்டு, தனது நண்பர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகிறார்.
முதுகு தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்து, இப்போது ஓய்வெடுத்து வருகிறார் வைரமுத்து. அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் நெப்போலியன்.