Home இந்தியா ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் குஷ்பு, நெப்போலியன் போட்டியிட வாய்ப்பு!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் குஷ்பு, நெப்போலியன் போட்டியிட வாய்ப்பு!

704
0
SHARE
Ad

KUSHBOOஸ்ரீரங்கம், ஜனவரி 16 – ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

அதன் முதல் படியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே திமுக தன் வேட்பாளரையும் அறிவித்தது. கடந்த 2011 சட்டசபை பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக உறுப்பினர் என்.ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிட வேண்டும் என்று அகில இந்திய தலைமையும், தமிழக பாஜக முன்னணி நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் திமுகவில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்த நடிகர் நெப்போலியன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், திருச்சியை சேர்ந்த மாநில நிர்வாகி ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதற்கிடையே இந்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழக காங்கிரசும் விருப்பம் தெரிவித்துள்ளது. கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று தனித்து போட்டியிடுவோம் என்று தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி அவர் கூறுகையில், ”அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முடிவெடுத்து போட்டியிடுமாறு கூறினால் மறுக்காமல் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.