சென்னை, ஜனவரி 16 – தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வராது என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். ஏர் உழுதல் என்பதின் பாரம்பரிய வார்த்தையே ஜல்லிக்கட்டு என்பதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டின் போது மனிதர்களுக்கு மட்டுமே காயம் ஏற்படுகிறது மாடுகளுக்கு அல்ல என கூறியுள்ள வைரமுத்து, திருவள்ளுவர் தினத்தை மத்திய அரசு கொண்டாடுவதை பற்றி விமர்சனம் வேண்டாம் என்றார்.
மேலும் பேசிய அவர் ”திருவள்ளுவர் பெயரைச் சொல்லாமல் எவரும் அரசியல் நடத்த முடியாது” என்றும் வைரமுத்து கூறியுள்ளார். தனது இல்லம் அருகே திருவள்ளுவர் சிலைக்கு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.