Home இந்தியா ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளப் பெருக்கு! குழந்தைகள் உட்பட 8 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளப் பெருக்கு! குழந்தைகள் உட்பட 8 பேர் பலி!

538
0
SHARE
Ad

la-fgகாஷ்மீர், செப்டம்பர் 5 – ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

அங்குள்ள ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், 23 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் அதிகமானோரை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப்படை ஆய்வாளர் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார். மேலும் சில வீரர்கள் காயமடைந்ததாக ஜம்மு வட்டாட்சியர் சந்த் மனு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

akபூஞ்ச் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பொதுமக்கள் 2 பேர் பலியாகினர். ரியாசி மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.