Home நாடு சர்ச்சைக்குரிய தனியார் துப்பறிவாளர் பாலா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புகிறார்

சர்ச்சைக்குரிய தனியார் துப்பறிவாளர் பாலா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புகிறார்

646
0
SHARE
Ad

pi.balaகோலாலம்பூர், பிப்.22- கொலை செய்யப்பட்ட மொங்கோலியா மாடல் அழகி அல்தான் துயா சரிபு வழக்கில் இரண்டு மாறுபட்ட சத்திய பிரமாணம் கொடுத்தவர் பி.பாலசுப்ரமணியம் (படம்) என்ற தனியார் துப்பறிவாளர். அதனால் பலத்த சர்ச்சைகளில் சிக்கிய அவர் தற்போது நிரந்தரமாக மலேசியா திரும்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியா கினி இணையத் தளத்திற்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் இதனை அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எதிர் வரும் பொது தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, தாம் மக்கள் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக அவர் கூறினார்.

“எனது தாய் நாட்டுக்கு எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நிரந்தரமாக திரும்புகிறேன். எனது நாட்டிற்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருவது  அவசியமாகும். மக்கள் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று பாலா கூறினார்.

இந்த தகவலை பாலசுப்ரமணியத்தின் வழக்கறிஞர் அமெரிக் சிங் சிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை பாலாவை வரவேற்க விமான நிலையத்தில் பெரிய கூட்டம் திரளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய எமெரிக் சிங் சிட்டு, பாலா வரும் நேரத்தில் தானும் விமான நிலையத்தில் இருக்கப் போவதாகவும், ஒருவேளை குடிநுழைவு அதிகாரிகள் பாலாவுக்கு தொந்தரவுகள் கொடுத்தால் அதற்குரிய  உதவிகளை தாம் செய்யப்போவதாக விளக்கமளித்தார்.

தற்போது இந்தியாவில் வசித்து வரும் பாலா, ஏற்கனவே மலேசியாவிற்கு இரகசியமாக வந்து சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் இரகசியமாக வந்த போது மலேசியா கினியிடம் நேரடி சந்திப்பு ஒன்றை வழங்கினார்.

– மலேசியாகினி