Home தொழில் நுட்பம் “அனைவரையும் இணையத்தால் இணைப்பது எங்கள் குறிக்கோள்” – மார்க் சக்கர்பெர்க்!  

“அனைவரையும் இணையத்தால் இணைப்பது எங்கள் குறிக்கோள்” – மார்க் சக்கர்பெர்க்!  

565
0
SHARE
Ad

mark-zuckerbergமெக்சிகோ, செப்டம்பர் 7 – பேஸ்புக் நிறுவனம் உலகை இணையத்தின் மூலம் முழுவதுமாக இணைக்க பல பில்லியன்களை செலவிடத் தயாராக இருப்பதாக அந்த நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

மெக்சிகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மார்க் சக்கர்பெர்க், இணையம் பற்றி கூறியதாவது:

உலகை இணையத்தால் மட்டுமே இணைக்க முடியும். உலகில் உள்ள அனைவரையும் இணைப்பது மட்டுமே எங்கள் குறிக்கோளாக உள்ளது.”

#TamilSchoolmychoice

இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் பேஸ்புக் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய தயாராக உள்ளது. வரும் காலங்களில் எங்கள் குறிக்கோள் அனைத்தும் சாத்தியமாகும் என நான் நம்புகின்றேன்” என்று  கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டின் முடிவில் உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 பில்லியன்களாக அதிகரிக்கும். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பேஸ்புக்கின் பயனாளர்களாக இருப்பார்கள் என சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் முன்னணியில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனமான பேஸ்புக், உலகின் அனைத்து பகுதிகளுக்கும் இணையச் சேவையை வழங்க பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது. கடந்த வருடத்தில் இணையச் சேவையை பயன்படுத்தாமல் பேஸ்புக்கினை பயன்படுத்த புதிய திட்டம் ஒன்றை உருவாக்கிய பேஸ்புக், அதனை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.