Home கலை உலகம் புதிய படத்தில் ‘அமிர்தா’ என்ற பெயரில் அறிமுகமாகிறார் புன்னகைப்பூ கீதா!

புதிய படத்தில் ‘அமிர்தா’ என்ற பெயரில் அறிமுகமாகிறார் புன்னகைப்பூ கீதா!

675
0
SHARE
Ad

vimal punnagai-poo-geethaகோலாலம்பூர், செப்டம்பர் 6 – டி.எச்.ஆர் வானொலியின் பிரபல அறிவிப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான புன்னகைப் பூ கீதா, நடிகர் விமலுடன் இணைந்து “நீயெல்லாம் நல்லா வருவடா” என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தற்போது படப்பிடிப்பு வேலைகளெல்லாம் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்குத் தயாராக உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் நாகேந்திரன், கடந்த வாரம் தமிழகத்தின் பிரபல வார இதழான ஆனந்த விகடனில், இந்த திரைப்படத்தில் புன்னகைப்பூ கீதாவை ‘அமிர்தா’ என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விரைவில் வெளிவர இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.