Home கலை உலகம் 8வது எடிசன் விருதுகள்: அஸ்ட்ரோவிற்கு 3 விருதுகள், ‘புன்னகைப்பூ’ கீதாவிற்கு சிறந்த கலைஞருக்கான விருது!

8வது எடிசன் விருதுகள்: அஸ்ட்ரோவிற்கு 3 விருதுகள், ‘புன்னகைப்பூ’ கீதாவிற்கு சிறந்த கலைஞருக்கான விருது!

677
0
SHARE
Ad

சென்னை, பிப்ரவரி 19 – 8-வது எடிசன் விருது விழா கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல மலேசிய நடிகையும், டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளருமான புன்னகைப்பூ கீதாவிற்கு ‘சிறந்த வெளிநாட்டு கலைஞர்’ விருது வழங்கப்பட்டது.

EDISON 8

(‘சிறந்த வெளிநாட்டு கலைஞர்’ விருது பெறும் ‘புன்னகைப்பூ’ கீதா)

#TamilSchoolmychoice

மேலும் இந்த விழாவில் மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனத்திற்கு 3 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த வருடத்தின் சிறந்த நிகழ்ச்சியாக சூப்பர் ஸ்டாரும், சிறந்த அலைவரிசையாக அஸ்ட்ரோ பாலிவுட்ஒன் எச்டி-யும், சிறந்த கலாச்சார நிகழ்வாக பொங்கு தமிழ் நிகழ்ச்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அஸ்ட்ரோ தமிழ் பிரிவு நிர்வாகி டாக்டர் ராஜாமணி, மலேசியா சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தொஸ்ரீ முகமட் நஸ்ரி பின் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ், மலேசிய எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோரும் இந்த விருது விழாவில் கலந்து கொண்டனர்.

edisonbanner_main

(விருது விழாவில் அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவு நிர்வாகி, மலேசியா சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தொஸ்ரீ முகமட் நஸ்ரி – படம் அஸ்ட்ரோ உலகம்)

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற விண்மீன் அணியும் இந்த விருது விழாவில் பங்குபெற்றனர்.

இந்த விருது விழாவில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்காக சிறந்த நடிகராக தனுஷுக்கும், ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பாபி சிம்ஹாவிற்கும், ‘கத்தி’ படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சதீஷிற்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்திற்கும் வழங்கப்பட்டன.