Home தொழில் நுட்பம் செப்டம்பர் 26-ம் தேதி ஐபோன் 6 இந்தியாவில் வெளியாகிறது!

செப்டம்பர் 26-ம் தேதி ஐபோன் 6 இந்தியாவில் வெளியாகிறது!

487
0
SHARE
Ad

iphone-6-sideபுது டெல்லி, செப்டம்பர் 10 – ஆசிய அளவில் சீனாவிற்கு அடுத்ததாக மிகப் பெரும் வர்த்தகச் சந்தையாக விளங்கும் இந்தியாவில், ஆப்பிளின் ஐபோன் 6-னைப் பெற பயனர்கள் செப்டம்பர் 26 வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “மேற்கத்திய நாடுகளில் இன்று அறிமுகமாக இருக்கும் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் இந்தியாவில் இம்மாதம் 26-ம் தேதி வெளியிடப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளின் விலைகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அவை முறையே 649 மற்றும் 749 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஐபோன் 6 திறன்பேசிகளில் பெரும் தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள ஆப்பிள், அதன் மின்கலன்களின் திறனிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஐபோன்  5 மற்றும் 5எஸ் திறன்பேசிகளைக் காட்டிலும் ஐபோன் 6 திறன்பேசிகளின் மின்கல திறன் பன்மடங்கு அதிகமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6 திறன்பேசிகள் எ8 செயலிகள் (Processor) மூலம் இயக்கப்படுவதால் 50 சதவீதம் அளவிற்கு கூடுதல் திறன்மிக்க தாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள், ஆப்பிள் பே உள்ளிட்ட வியப்பளிக்கும் செயலிகள், சிறந்த வெளிப்புறத் தோற்றம் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு வர இருக்கும் இருக்கும் ஐபோன் 6 விற்பனையில் வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.