Home வணிகம்/தொழில் நுட்பம் தெற்காசிய அளவில் உச்சத்தை நோக்கி மலாயன் வங்கி!

தெற்காசிய அளவில் உச்சத்தை நோக்கி மலாயன் வங்கி!

438
0
SHARE
Ad

Maybank..கோலாலம்பூர்,செப்டம்பர் 10 – நாட்டின் முதன்மை வங்கியான மலாயன் வங்கி மற்ற தெற்காசிய கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வங்கிகளைக் காட்டிலும் மிகச் சிறந்த உயரத்தை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சியினை எந்தவொரு சிறு வங்கிகளின் இணைப்பும் இன்றி தனித் தன்மையாகவே பெறுவதற்கு தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது.

மலாயன் வங்கியின் வளர்ச்சி மற்றும் மற்ற வங்கிகளுடனான இணைப்பு போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான டத்தோ அப்துல் ஃபரித் அலியாஸ் கூறியிருப்பதாவது:-

“மலாயன் வங்கி வளர்ச்சிப் பாதையில் தற்போது பயணித்தாலும் மற்ற வங்கிகளுடனான இணைப்பு பற்றி தற்போது எந்தவொரு முடிவுகளையும் எடுக்க வில்லை. மேலும் அதற்கான அவசியமும் தற்போது ஏற்படவில்லை. எனினும் சிஐஎம்பி, ஆர்எச்பி மற்றும் எம்பிஎஸ் வங்கிகளின் இணைப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கு பெரிய அளவில் நன்மையை ஏற்படுத்தும்.”

#TamilSchoolmychoice

“தெற்காசிய அளவில் மிகப் பெரிய முகவரியை நமது நாட்டிற்கு ஏற்படுத்த வேண்டும் எனில், நமக்கு சிறந்த பொருளாதாரம் மற்றும் தன்னிறைவான வளர்ச்சியினைக் கொண்ட பெரிய வங்கி ஒன்று வேண்டும். அதற்கான பாதையை நோக்கி மலாயன் வங்கி பயணிக்கும்.”

“மேலும், மலாயன் வங்கிக் குழுமத்தை சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம். தற்போதய நிலையில் மலேசியாவில் மலாயன் வங்கி போதுமான அளவு வளர்ச்சியினைப் பெற்றுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் உள்ள இஸ்லாமிய வங்கிகளில் மலாயன் வங்கி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கீட்டின் படி வங்கியின் வைப்புத்தொகை சுமார் 83 பில்லியன் ரிங்கெட்கள் ஆகும். மேலும் 2013-ம் நிதியாண்டில் வங்கியின் மொத்த மதிப்பு 132 பில்லியன் ரிங்கெட்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.