Home நாடு எம்எச் 17: சக்தி வாய்ந்த பொருட்கள் மோதியதே விமானம் வெடித்துச் சிதற காரணம்!

எம்எச் 17: சக்தி வாய்ந்த பொருட்கள் மோதியதே விமானம் வெடித்துச் சிதற காரணம்!

578
0
SHARE
Ad

emergency-worker-mh17கோலாலம்பூர், செப்டம்பர் 10 – சக்தி வாய்ந்த பொருட்கள் வெளிப்புறத்தில் இருந்து மோதியதே, எம்எச் 17 விமானம் நடுவானில் வெடித்துச் சிதற முக்கிய காரணம் என டச்சு பாதுகாப்பு வாரியத்தின் பூர்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 777 ரக விமானமான எம்எச் 17 கடந்த ஜூலை 17ஆம் தேதி 298 பயணிகளுடன் கிழக்கு உக்ரேன் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது.

எந்தவித ஒலிக்குறிப்பு எச்சரிக்கைகளோ அல்லது விமான பாகங்கள் ஏதேனும் இயங்காமல் போனது தொடர்பான தகவல் பரிமாற்றங்களே, விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவாகவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

mh17,

மேலும் கறுப்புப் பெட்டியில் உள்ள விவரங்களை யாரேனும் மாற்றியமைத்திருப்பதற்கான ஆதாரங்களும் இல்லை என டச்சு பாதுகாப்பு வாரியம்
தெரிவித்துள்ளது.

“அதிக சக்தி வாய்ந்த பொருட்கள் விமானத்தின் மீது அதன் வெளிப்புறத்தில் இருந்து மோதியதுடன், அதற்குள் ஊடுருவியதும்தான் விமானம் நடுவானில் வெடித்துச் சிதற காரணம்,”  என்று அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கையில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

mh17_article3

மேலும் எம்எச் 17 வெடித்துச் சிதற தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது விமானப் பணியாளர்களின் செயல்பாடுகளோ காரணமல்ல என்றும் அந்த அறிக்கை உறுதிபடத் தெரிவிக்கிறது.