Home நாடு யூபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் கசிவு – செப்டம்பர் 30 மீண்டும் ஆங்கிலத் தேர்வு

யூபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் கசிவு – செப்டம்பர் 30 மீண்டும் ஆங்கிலத் தேர்வு

657
0
SHARE
Ad

malaysiaகோலாலம்பூர், செப்டம்பர் 12 – தற்போது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றுவரும் யூபிஎஸ்ஆர் தேர்வில் நேற்று அறிவியல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு அந்த தேர்வு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த கேள்வித்தாள் கசிந்துள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேர்வு வாரியத்தின் இயக்குநர் இத்தகவலை வெளியிட்டார்.

இதற்கிடையில், ஆங்கிலப் பாடத்திற்கான கேள்வித் தாளும் கசிந்துள்ளதால், அந்த தேர்வும் மீண்டும் அதே செப்டம்பர் 30ஆம் தேதியே நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

யூபிஎஸ்ஆர் தேர்வின் அறிவியல் பாடத்திற்காக தயாரிக்கப்பட்டிருந்த கேள்வித்தாள் கசிந்துள்ளதாகவும், அவை சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டிருந்ததாகவும் புகார் வந்ததையொட்டி தேர்வு வாரியம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது.

தேர்வு வாரியம் தயாரித்திருந்த கேள்விகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டிருந்தது உண்மைதான் என்று கண்டறியப்பட்ட பின்னரே, இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட இலாகாக்களிடம் புகார் செய்யப்பட்டிருந்ததாகவும், அறிவியல் தேர்வுத் தாள்களின் கேள்விகள் கசிந்தது எப்படி? என்பதையொட்டி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இவ்வாண்டிற்கான யூபிஎஸ்ஆர் தேர்வில் அறிவியல் பாடத் தேர்வு வரும் செப்டம்பர் 30-ம் தேதி நடத்தப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார்.