Home உலகம் உலக நாடுகளின் முயற்சிகளால் ஓசோன் பாதிப்பு குறைந்துள்ளது – ஐ.நா!

உலக நாடுகளின் முயற்சிகளால் ஓசோன் பாதிப்பு குறைந்துள்ளது – ஐ.நா!

828
0
SHARE
Ad

ozoneஜெனிவா, செப்டம்பர் 12 – உலக நாடுகளின் முயற்சிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுகள் காரணமாக ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

மனித நாகரீகம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக மனிதன் வெளியிடும் நச்சுக் கழிவுகள் காரணமாக, பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

உயிர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியைத் தாக்கா வண்ணம் காத்து வந்த அதன் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டது. இது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கரியமில வாயுவின் பயன்பாடு அதிகரித்து வந்ததால், அண்டார்டிகா பகுதியின் மேற்பரப்பில் இருந்த ஓசோனின் ஒரு பகுதியில் ஓட்டை  மிகவும் பெரியதாகக் காணப்பட்டு வந்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல நடைமுறைகளை மேற்கொண்டு வந்தன.

imagesஇந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பாதிப்புக்கு உள்ளாகி இருந்த ஓசோன் படலம் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கி உள்ளதற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதுபோல் அண்டார்டிகா பகுதியில் விரிவ துவாரமும் தற்போது தடைப்பட்டுள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. எனினும் ஓசோன் படலத்தில் காணப்படும் இடைவெளி முற்றிலும் மறைந்து போகுமா என்பதை உறுதியாக கூறமுடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.