Home கலை உலகம் “சைமா” – கோலாலம்பூரில் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா!

“சைமா” – கோலாலம்பூரில் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா!

804
0
SHARE
Ad

Santhiya updatedகோலாலம்பூர், செப்டம்பர் 13 – மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழா, நேற்று மாலை கோலாலம்பூரில் கோலாகலமாகத் தொடங்கியது.

தென்னிந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவிற்காக தற்போது கோலாலம்பூரில் குழுமியுள்ளனர்.

முதல் நாளாக நடைபெற்ற தெலுங்கு, மலையாளப் படங்களுக்கான விருதளிப்பு கோலாலம்பூர் நெகாரா அரங்கில் நேற்று மாலை 6 மணி முதல் தொடங்கியது.

#TamilSchoolmychoice

விழாவுக்கான பிரம்மாண்டமான மேடை இதுவரை மலேசிய இரசிகர்கள் காணாத அளவுக்கு பெரியதாகவும், வண்ணமயமாகவும் காட்சியளித்தது. மேடையின் பின்னணியில் தெரிந்த கண்ணாடி போன்ற துல்லியமான 3-டி வடிவ கண்ணாடிகளில் பல்வேறு வண்ணங்களிலான ஓவிய வடிவங்களும் படங்களும் காட்சியளித்தது கண்ணைப் பறிக்கும் விதமாக இருந்தது.

விருது விழா தொடங்குவதற்கு முன்பு  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், தொகுப்பாளர்களும் வரத்தொடங்கினர். மலேசியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் நட்சத்திரங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அந்த படங்களைக் கீழே காணலாம்:

IMG_3383

IMG_3415

IMG_3363

IMG_3374

IMG_3385

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்

 

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)