Home கலை உலகம் “சைமா” – விழாவில் இலட்சுமி மேனன் (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 6)

“சைமா” – விழாவில் இலட்சுமி மேனன் (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 6)

850
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – இன்று  இரண்டாவது நாளாக நடைபெறும் “சைமா” எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில் கலந்து கொள்ள முன்னணி தமிழ் நடிகை இலட்சுமி மேனனும் வருகை தந்திருக்கின்றார்.

சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்ட அவரது பிரத்தியேக படங்களை இங்கே காணலாம்:

Letchumy Menon

#TamilSchoolmychoice

மலையாள மண்ணின் பிறப்பாக இருந்தாலும், வந்தாரை வரவேற்கும் தமிழ் மண்ணில் இன்றைக்கு இலட்சுமி மேனன்தான் முன்னணி நட்சத்திரம்…

Letchumy Menon

விஷாலுடன் வரிசையாக படங்களுடன் நடித்து வருவதால், சில கிசுகிசுக்களுக்கும் தீனி போட்டவர் இலட்சுமி மேனன். ஆகக் கடைசியான பரபரப்பு நான் சிகப்பு மனிதன் படத்தில் அவர் விஷாலுடன் நடித்த முத்தக் காட்சி….

Letchumy Menon

ஆகக் கடைசியாக இலட்சுமி மேனன் நடித்து வெளிவந்த, ஜிகர்தண்டா, மஞ்சப்பை ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைய இன்றைக்கு, அதிர்ஷ்ட நடிகையாக தமிழ்த் திரையுலகமே கொண்டாடுவது அவரைத் தான்…

Letchumy Menon

நேற்றைய சைமா நிகழ்வுக்கு வருகை தந்த இலட்சுமி மேனன் இன்று இரண்டாவது நாள் சைமா விழாவுக்கும் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செல்லியல் பிரத்தியேக படங்களும், செய்தியும் – பீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)