Home கலை உலகம் ‘சைமா’ விருது விழா நாள் 2: முன்னணி தமிழ் திரைநட்சத்திரங்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது!

‘சைமா’ விருது விழா நாள் 2: முன்னணி தமிழ் திரைநட்சத்திரங்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது!

791
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ் மற்றும் கன்னட திரையுலக நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ் திரையுலகில் இருந்து திரிஷா, அசின், தமன்னா, நீத்து சந்திரா, அமலாப்பால், ராய் லஷ்மி, லட்சுமி மேனன், சிவகார்த்திகேயன், சூரி, பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், ராதிகா, குஷ்பு, நா.முத்துகுமார், கார்த்திக், சிம்பு ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிம்பு, லஷ்மி மேனன் ஆகியோர் தங்களின் படங்களில் வந்த வெற்றிப் பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

#TamilSchoolmychoice

மேலும் இந்த விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு இந்திய சுற்றுலாத்துறைக்கு சிறப்பான சேவையாற்றியதற்காக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அந்த விருதை பிரதமர் துறை அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சிரஞ்சீவிக்கு வழங்கினார்.

இந்த விருது விழாவின் சில சுவாரசியமான படங்கள் உங்கள் பார்வைக்கு:-

SIIMA AWARDS 2014

தென்னிந்திய திரையுலகின் மிகவும் ஸ்டைலான நடிகர் விருது சிம்புவுக்கு வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் அழகு நடிகையர் மூவர், திரிஷா, ஸ்ரேயா, தமன்னா…

IMG_4465

தம்படம் என்னும் செல்ஃபி படம் எடுக்கும் மோகம் சைமா விருது விழாவிலும் முக்கிய இடத்தைப் பிடித்தது. விழாவின் வணிக ஆதரவாளர்கள் மைக்ரோ மேக்ஸ்  நிறுவனத்தின் அதி நவீன திறன் பேசிகள் சிரஞ்சீவி, ராதிகா, குஷ்பு, ஸ்ரீதேவி ஆகிய நான்கு பிரபல நட்சத்திரங்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் அறிவிப்பாளர் நடிகர் மிர்ச்சி சிவாவுடன் தம்படம் எடுத்துக் கொண்ட நட்சத்திரங்கள்…

 

IMG_4457

உச்ச நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் அரங்கில் வந்திருந்த அனைவரையும் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன்தான். அவருக்கு கடந்த ஆண்டின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அறிவிப்பாளர் சிவா, அமலா பால், முன்னாள் மலேசிய துணையமைச்சர் கோகிலன் பிள்ளை ஆகியோருடன் சிவகார்த்திகேயன்…நிகழ்வின் உச்சகட்டமாக அமைந்தது நடிகர் ரஜினிகாந்த் சைமா விருது விழாவிற்கு வந்திருந்தால் என்ன பேசியிருப்பார், எப்படி பேசியிருப்பார் என சிவகார்த்திகேயன் செய்து காட்டிய அசத்தல் நகல் குரல் நடிப்பு (மிமிக்ரி)….

SIIMA AWARDS 2014

திரையில் தான் பாடி நடித்த பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்வித்த சிலம்பரசன் என்ற சிம்பு…

SIIMA AWARDS 2014

நடிகை இலட்சுமி மேனனும் முதன் முறையாக மேடையாக குழு நடனம் வழங்கிய காட்சி….

IMG_4517

நடிகை இலட்சுமி மேனன் வழங்கிய குழு நடனத்தின் மற்றொரு காட்சி….

செய்திகள், பிரத்தியேகப் படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)