Home நாடு ‘சைமா’ விருது விழாவில் மலேசியப் பிரபலங்கள்!

‘சைமா’ விருது விழாவில் மலேசியப் பிரபலங்கள்!

747
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – ‘சைமா’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா கடந்த இரண்டு நாட்களாக கோலாலம்பூரில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சைமா திரைப்பட விருது விழாவின் இரண்டாம் நாளான நேற்று பிரபல மலேசியத் திரை நட்சத்திரங்களான புன்னகைப்பூ கீதா, ஷைலா , சங்கீதா கிருஷ்ணசாமி ஆகிய மூவரும் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இதுதவிர பிரபல வானொலி அறிவிப்பாளர்களான டிஎச்ஆர் ராகா புகழ் சுரேஷ் , அகிலா மற்றும் மின்னல் பண்பலை நிகழ்ச்சி தயாரிப்பாளர் நிர்மலா சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IMG_3967

(பிரபல நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் புன்னகைப்பூ கீதா)

IMG_4006

(வெண்ணிற இரவுகள், வெட்டிப் பசங்க புகழ் சங்கீதா கிருஷ்ணசாமி)

IMG_4591

 

(பிரபல பாடகி மற்றும் நடிகையுமான ஷைலா நாயர்)

IMG_3969

(டிஎச்ஆர் வானொலியின் பிரபல அறிவிப்பாளர் சுரேஷ்)

IMG_3991

(டிஎச்ஆர் மற்றும் அஸ்ட்ரோ விழுதுகள் புகழ் அகிலா)

IMG_3971

(இடது – மின்னல் பண்பலை புகழ் அறிவிப்பாளர் நிர்மலா சரவணன்)

செய்திகள்- படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்