Home கலை உலகம் ‘அரண்மனை’ திரைப்படத்தை மலேசியாவில் வீடு புரொடக்சன்ஸ் வெளியிடுகின்றது!

‘அரண்மனை’ திரைப்படத்தை மலேசியாவில் வீடு புரொடக்சன்ஸ் வெளியிடுகின்றது!

643
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 15 – சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிக்கா மோத்வானியின் வித்தியாசமான நடிப்பில் இம்மாதம் வெளியாகவுள்ள ‘அரண்மனை’ திரைப்படத்தை, மலேசியா முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் உரிமையை வீடு புரொடக்சன்ஸ் வெளியிடவுள்ளது.

மலேசியாவின் பிரபல நடிகர் டெனிஸ் குமார் மற்றும் அவரது மனைவியும், இயக்குநருமான விமலா பெருமாளுக்கு சொந்தமான இந்த நிறுவனம், தங்களது சொந்த தயாரிப்பான ‘விளையாட்டுப் பசங்க’, ‘வெட்டி பசங்க’ ஆகிய திரைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், அண்மையில், இந்நிறுவனம் மலேசிய இயக்குநர் கண்ணனின் ‘பாஸ்போர்ட் மணியம்’ என்ற திரைப்படத்தை அதன் தயாரிப்பாளருடன் இணைந்து டிவிடியாக வெளியிட்டது.

#TamilSchoolmychoice

Vetti pasanga

(டெனிஸ்குமார் மற்றும் விமலா பெருமாள்)

தற்போது சற்றே ஒரு படி உயர்ந்து, இந்தியாவில் இருந்து வெளிவரும் திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.

அதன் படி, ‘அரண்மனை’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 20 முதல் மலேசியா முழுவதும் வெளியிடும் அதிகாரப்பூர்வ உரிமையை வீடு புரோடெக்சன்ஸ் பெற்றுள்ளது.

நாடெங்கிலும் உள்ள திரையரங்குகளில் லோட்டஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிடும் (டிஸ்ட்ரிபியூசன்) பொறுப்பை ஏற்றுள்ளது.

இது குறித்து டெனிஸ் குமார் செல்லியலிடம்  கூறுகையில், “மலேசியாவில் வீடு புரொடெக்சன்ஸ் வெளியிடும் முதல் இந்தியத் திரைப்படம் ‘அரண்மனை’. சுந்தர் சி இயக்கத்தில் நடிகை ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, சந்தானம், கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கின்றனர். நகைச்சுவை படமான இதை நிச்சயமாக நமது மலேசிய மக்கள் மிகவும் விரும்புவார்கள்” என்று தெரிவித்தார்.

இனி மேலும் இது போன்ற தரமான படங்களை வீடு புரொடக்சன்ஸ் தொடர்ந்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-ஃபீனிக்ஸ்தாசன்

அரண்மனை திரைப்படத்தின் முன்னோட்டம்:-