Home உலகம் 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடம் – ஐ.நா அறிக்கை! 

5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடம் – ஐ.நா அறிக்கை! 

592
0
SHARE
Ad

indiaநியூயார்க், செப்டம்பர் 17 – உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு சதவீதம் இந்தியாவில் தான் அதிகம் என ஐ.நா தெரிவித்துள்ளது. குழந்தைகளின் இறப்பு குறித்த கணக்கீடுகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டுள்ள ஐ.நா, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாகும். கடந்த 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1.34 மில்லியன் ஆகும்.

இது கடந்த 1990-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதத்திற்கு மேல் குறைவாகும். 1990-ம் ஆண்டு இந்தியாவில் 3.33 மில்லியன் குழந்தைகள் ஆண்டுதோறும் இறந்தனர்.

#TamilSchoolmychoice

எனினும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் 2013-ம் ஆண்டிற்கான இறப்பு வீதம் மிக அதிகம். அதனால் இந்தியா 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் முதலிடத்தில் உள்ளது”

“இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டில் 1000-க்கு 33 குழந்தைகள் இறந்துள்ளனர். இவர்களின் இறப்பிற்கு நோய், வறுமை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருந்துள்ளன” என்று ஐ.நா கூறியுள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு மற்றும் சீனா முன்னிலை வகிப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.