Home கலை உலகம் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்!

சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்!

514
0
SHARE
Ad

சென்னை, செப்டம்பர் 18 – திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கமல் நேற்று இரவு சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

பாபநாசம் படத்திற்காக கமல்ஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு உணவு செரிமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கமலஹாசனின் மிக நெருங்கிய நண்பரும், அவரது உடற்பயிற்சி நிபுணருமான ஒலிம்பியா ஜெய் நேற்று கமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Jaykumar

(கமல்ஹாசனுடன் ஒலிம்பியா ஜெய்)

பின்னர் அவர் வெளியிட்டுள்ள தகவலில், “உணவு ஒவ்வாமை காரணமாக சற்று பாதிக்கப்பட்ட கமல், சிகிச்சைக்குப் பின்னர் தற்போது பரிபூரணமாக குணமடைந்துவிட்டார். நாளை மறுநாள் தொடங்கி பாபநாசம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். கமல் இன்னும் அதே வலிமையான உடற்கட்டுடன், அசாத்திய தன்னம்பிக்கையுடன் தான் உள்ளார். எனவே அவரது ரசிகர்கள் யாரும் இது குறித்து கவலையடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.