Home வணிகம்/தொழில் நுட்பம் ஆராய்ச்சிப் பிரிவை மூடியது மைக்ரோசோஃப்ட் – 2100 பேர் வேலை இழப்பு!

ஆராய்ச்சிப் பிரிவை மூடியது மைக்ரோசோஃப்ட் – 2100 பேர் வேலை இழப்பு!

719
0
SHARE
Ad

microsoft-software-1024x661கலிபோர்னியா,செப்டம்பர் 21-மைக்ரோசோஃப்ட் நிறுவனம் கலிபோர்னியாவிலுள்ள தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் கீழ் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வந்த ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் என 2100 பேர் தங்கள் வேலையை இழக்க உள்ளனர்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசோஃப்ட், எதிர்கால பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தனது நிறுவனத்தில் சுமார் 18000 பேர் வரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவை அனைத்திற்குமான  உத்தரவுகளை, மைக்ரோசோஃப்ட்டின்  தலைமை நிர்வாக அதிகாரி  சத்தியா நாதெல்லா பிறப்பித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, மைக்ரோசோப்ட்டில் 14 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை  15,100 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் குறிப்பிட்ட சில துறைகளில் இருந்து, 2000-திற்கும் மேற்பட்டோர் நீக்கப்படலாம் என மைக்ரோசோப்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

மைக்ரோசோஃப்ட் பெருமளவிலான பணியாளர்களை நீக்கியிருப்பது ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையிலுமே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து இலாபகரமான நிறுவனமாக மைக்ரோசோப்ட் காட்டப்பட்டு வந்தாலும், அமல்படுத்தப்பட்டிருக்கும் இத்தகைய பணி நீக்கங்கள் அந்நிறுவனம் பற்றிய பொருளாதார கணக்கீடுகள் போலியானதா என்ற ஐயத்தை எழுப்புகின்றன.