Home வணிகம்/தொழில் நுட்பம் 9 நாடுகளில் வர்த்தக ரீதியாக ஐபோன் 6 வெளியானது!

9 நாடுகளில் வர்த்தக ரீதியாக ஐபோன் 6 வெளியானது!

541
0
SHARE
Ad

iPhone-6,சிட்னி, செப்டம்பர் 20 – திறன்பேசிகள் மக்கள் மத்தியில் எத்தகைய இடத்தை பெற்றுள்ளன என்பதை, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் புதிய திறன்பேசிகளின் வர்த்தக ரீதியான வெளியீட்டின் போது தெரிந்து கொள்ளலாம்.

மேற்கத்திய நாடுகளில் நேற்று வர்த்தக ரீதியாக ஆப்பிளின் புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் வெளியிடப்பட்டது. ஆப்பிள் வரலாற்றில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஐபோன் 6 திறன்பேசிகளை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

iphone-6உலக நாடுகளின் நேரப்படி ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஐபோன் 6-களின் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் ஆப்பிள் வர்த்தக கடைகள் தங்கள் வர்த்தகத்தை தொடங்கின. எனினும் அதற்கு பலமணி நேரத்திற்கு முன்பே, மக்கள் அந்த கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர்.

#TamilSchoolmychoice

உள்ளூர் பத்திரிக்கைகள் இதற்காக நடத்திய கணக்கெடுப்பில் ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்றதாகக் கூறப்படுகின்றது.

iphone6,மொத்தம் 9 நாடுகளில் வெளியான ஐபோன் 6 திறன்பேசிகளின் விற்பனை, நேற்று ஒரு நாளில் மட்டும் பல மில்லியன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வருடங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் சென்ற திறன்பேசிகளாக ஐபோன் 5 மற்றும் 5 எஸ் இருந்த நிலையில், ஐபோன் 6 தற்போது அந்த வரலாற்றை மாற்றியுள்ளதாகவே ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.

அண்டை நாடுகளில் சிங்கப்பூரில் மட்டுமே ஐபோன் 6 நேற்று விற்பனைக்கு வந்தது. ஆப்பிள் கருவிகள் அறிமுகப்படுத்தப்படும் முதல் கட்ட நாடுகளில் எப்போதுமே சிங்கப்பூர் இடம் பெற்று வந்துள்ளது.