Home கலை உலகம் படத்தில் இருப்பது சிம்பு தானா? – முத்தக் காணொளியால் பரபரப்பு!

படத்தில் இருப்பது சிம்பு தானா? – முத்தக் காணொளியால் பரபரப்பு!

704
0
SHARE
Ad

Simbuகோலாலம்பூர், செப்டம்பர் 20 – அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகர் சிம்பு என்பது திரையுலகில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நயந்தாராவுடன் உதட்டு முத்தம், ஹன்சிகாவுடன் காதல், கட்டியணைப்பு என பல தொடர் சர்ச்சைகளில் சிக்கியவர், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திடீரென இமயமலைப் பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார் என்று தமிழக பத்திரிகைகளில் பரவலாக செய்திகள் வந்தன.

அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் கூட, அறிவிப்பாளர் மிர்ச்சி சிவா, மேடைக்கு வந்த சிம்புவிடம், இமயமலைக்கு அடிக்கடி செல்வது குறித்து கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று முதல் சிம்பு பற்றிய புதிய சர்ச்சை ஒன்று பேஸ்புக் தளத்தில் பரவி வருகின்றது.

அதாவது சிம்புவைப் போன்ற தோற்றம் கொண்ட இளைஞர், தங்கும் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற காணொளி பேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அந்த பெண் ஒரு நடிகையா அல்லது மலேசியாவைச் சேர்ந்த பெண்ணா என்பது தெரியவில்லை.

“Simbu caught on cctv kissing malaysian girl in Hotel KL” என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியாகியுள்ள அந்த காணொளி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

அந்த காணொளியில் செப்டம்பர் 13 என்ற தேதி, என்பது தெளிவாகத் தெரிகின்றது. சைமா விருது விழாவில் இரண்டாவது நாளான அன்று சிம்பு கோலாலம்பூரில் தான் இருந்தார். அன்று விருது விழாவில் கலைநிகழ்ச்சியையும் படைத்தார்.

எனினும், இந்த காணொளி குறித்து சிம்புவின் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வெளிவரவில்லை.