Home நாடு அஸ்மின் அலிக்கு அன்வார் ஆதரவா? பிகேஆர் திட்டவட்ட மறுப்பு

அஸ்மின் அலிக்கு அன்வார் ஆதரவா? பிகேஆர் திட்டவட்ட மறுப்பு

879
0
SHARE
Ad

Azmin Ali பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்  21 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தேர்வு செய்யப்பட்டால், அவருக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முழு ஆதரவும் உண்டு எனக் கூறப்படுவதை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ சைபுடின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரி பெசார் பதவிக்கு டத்தோஸ்ரீ வான் அசிசாவைத் தவிர வேறு யாரையும் பிகேஆர் பரிசீலிக்காது என்றார்.

“மந்திரி பெசார் பதவி தொடர்பில் பிகேஆர் அதிகாரப்பூர்வமாக முன்பு எடுத்துள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை” என்று சைபுடின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் சட்டமன்றத்தில் உள்ள 56 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின்
ஆதரவு வான் அசிசாவுக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், 30 உறுப்பினர்கள் வான் அசிசாவுக்கு ஆதரவான படிவத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இப்படிவத்தில் அஸ்மின் அலியும் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில்   அடுத்த மந்திரி பெசாராக பொறுப்பேற்க அவருக்கு அதிக வாய்ப்புள்ளதாக ஆருடத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் மந்திரி பெசார் பதவி தொடர்பில் வெளியாகும் இத்தகைய தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என சைபுடின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சிலாங்கூரின் புதிய மந்திரி
பெசார் பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. மந்திரி பெசார் பதவிக்கு பொருத்தமானவர்கள் என சிலாங்கூர் அரண்மனை கருதுபவர்களின் பட்டியலில் அஸ்மின் அலியின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் பாஸ் கட்சியின் இஸ்கந்தர் சமாட் மற்றும் டாக்டர் அஹ்மட் யூனுஸ் கைரி ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.