Home கலை உலகம் மலேசியக் கலையுலகம்: நடிகை விக்னேஸ்வரி பிரத்தியேகப் படங்கள்!

மலேசியக் கலையுலகம்: நடிகை விக்னேஸ்வரி பிரத்தியேகப் படங்கள்!

740
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 22 –  மலேசியத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றில் மிகவும் பிரபலமானவர் நடிகை விக்னேஸ்வரி. குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் என்றால் அந்த இடம் எப்போதும் விக்னேஸ்வரிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். காரணம் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் அந்த கதாப்பாத்திரத்தை மிக இயல்பாக செய்து விடும் ஆற்றல் கொண்டவர்.

மலேசியக் கலையுலகில் ஒரு பாடகியாக அறிமுகமான விக்னேஸ்வரி, பின்னர் நடிப்புத் துறையிலும் கால் பதித்தார். இயக்குநர் விஜயசிங்கம், சாரதா சிவலிங்கம், சஞ்சய் குமார், நாகா, சி குமரேசன், பிரகாஷ் ராஜாராம், சுபாஸ் உள்ளிட்ட மலேசியாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் விக்னேஸ்வரி முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த வருடம் வெளியான சி.குமரேசனின் வெற்றிப் படமான ‘மைந்தன்’ மற்றும் தமிழ்நாட்டில் பிரபல தொலைக்காட்சி நாடக இயக்குநர் சிஜே பாஸ்கரின் ‘மூடுபனி’ ஆகிய படங்களிலும் விக்னேஸ்வரி நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு திறமையும், அழகும் கொண்டவரான விக்னேஸ்வரி தற்போது அதற்காக எடை குறைத்து தனது புதிய தோற்றத்தின் பிரத்தியேகப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Vicky

Vicky 3

Vicky 1

Vicky 2

Vicky 4

படங்கள்: சனா ஃபோட்டோகிராபி