Home கலை உலகம் மூன்று நாட்களில் ‘அரண்மனை’ படம் ரூ.8 கோடி வசூல் சாதனை!

மூன்று நாட்களில் ‘அரண்மனை’ படம் ரூ.8 கோடி வசூல் சாதனை!

1074
0
SHARE
Ad

aaranmanaiசென்னை, செப்டம்பர் 22 – கடந்த வாரம் வெளிவந்த ‘அரண்மனை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றி நடைப்போடுகிறது.

இப்படத்தின் 3 நாள் வசூல் முன்னணி நடிகர்கர்களின் படங்களுக்கு இணையாக வந்துள்ளது. படத்தின் முதல் நாள் வசூலே தமிழகம் முழுவதும் ரூ 2.60கோடி வந்தது.

aranmanaiஇதை தொடர்ந்து சென்னையில் மட்டும் இப்படம் இதுவரை ரூ 89 லட்சம் வசூல் செய்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படம் இன்றுவரை ரூ.8 கோடி வசூல் செய்து வசூல் சாதனை படத்துள்ளது.