Home கலை உலகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் “தங்கக்காசு இலவசம்” தொலைக்காட்சித் தொடர்!

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் “தங்கக்காசு இலவசம்” தொலைக்காட்சித் தொடர்!

654
0
SHARE
Ad

10599225_10152404401190415_1281821708598080757_n

கோலாலம்பூர், செப்டம்பர் 22 – இமேஜினேசன் மேக்கர்ஸ் உருவாக்கத்தில் இயக்குநர் பாணி இயக்கத்தில், டிவி 2 -ல்ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் புதிய தொலைக்காட்சி தொடர் ‘தங்கக் காசு இலவசம்’.

இத்தொடரில், சசிதரன் கே ராஜூ, அகோந்திரன், கோபிநாத், யாஸ்மின், அனு, கிளாரா, கே.எஸ் மணியம் மற்றும் ராஜம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களை நல்வழிக்குக் கொண்டு வர புதையல் இருப்பதாகக் கூறும் பெற்றோர், அவர்களை சாமர்த்தியமாக விவசாயம் செய்ய வைக்கின்றனர்.

1003210_10151735425030415_106537755_n

(படப்பிடிப்பில் இயக்குநர் பாணி)

தோட்டப்புறத்து வாழ்க்கையையும், இளைஞர்களையும் மையமாக வைத்து முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 4.35 மணியளவில் டிவி2 -ல் ஒளிபரப்பாகின்றது.

இன்னும் இரண்டே எபிசோடுகள் உள்ள இந்த தொடரை மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.