Home நாடு சிலாங்கூர் மந்திரி பெசார்: அஸ்மின் அலியை நியமித்து கடிதம் அனுப்பியது அரண்மனை

சிலாங்கூர் மந்திரி பெசார்: அஸ்மின் அலியை நியமித்து கடிதம் அனுப்பியது அரண்மனை

670
0
SHARE
Ad

Azmin Aliபெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 – சிலாங்கூர் புதிய மந்திரி பெசாராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமித்து சிலாங்கூர் அரண்மனை நியமனக் கடிதம் அனுப்பி உள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகும். அதைத் தொடர்ந்து 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மந்திரி பெசார் பதவிக்காக சிலாங்கூர் சுல்தான் ஷரபுதின் இட்ரிஸ் ஷா, கடந்த வாரம் நேர்காணல் நடத்திய மூன்று வேட்பாளர்களில் அஸ்மின் அலியும் ஒருவர்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் சிஜாங்காங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் அகமட் யூனுஸ் ஹைரி மற்றும் செம்பகா தொகுதி உறுப்பினர் இஸ்கந்தர் அப்துல் சமட் ஆகியோர் மற்ற இரு வேட்பாளர்கள் ஆவர்.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அஸ்மின் அலி புக்கிட் அந்தாரபங்சா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார்.

இதனைத் தொடர்ந்து பிகேஆர் புதிய அரசியல் சிக்கலில் தற்போது சிக்கிக் கொண்டுள்ளது.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரே மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டுள்ளதால், சுல்தானின்அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்வதா அல்லது விடாப்பிடியாக வான் அசிசாதான் எங்களின் ஒரே வேட்பாளர் என்ற நிலைப்பாட்டைத் தொடர்வதா, என்ற குழப்பநிலை தற்போது பிகேஆர் கட்சியின் தலைமைத்துவத்திற்குள் ஊடுருவி உள்ளது.