Home நாடு அன்வார் மீதான காலிட்டின் நடவடிக்கை ஆராயப்படும் – அஸ்மின் அலி உறுதி

அன்வார் மீதான காலிட்டின் நடவடிக்கை ஆராயப்படும் – அஸ்மின் அலி உறுதி

811
0
SHARE
Ad
Selangor-Khalid-Anwar-300x202

கோலாலம்பூர், செப்டம்பர் 23 – காலிட் இப்ராகிம் நேற்று சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் கடைசியாக, அன்வாரை மாநில பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கி, அலுவலகத்தையும் மூடினார்.

இந்நிலையில், காலிட்டிற்குப் பதிலாக இன்று சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராகப் பதவி ஏற்றுள்ள அஸ்மின் அலி, இந்த நடவடிக்கையை மறு பரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று பதவி ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின் அலி, காலிட்டின் இந்த நடவடிக்கை குறித்து விரிவாக ஆராயப் போவதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகர் பதவி வகித்த அன்வார் மீது தேவைக்கு அதிகமான செலவு செய்தார் என பல்வேறு அவதூறுகள் அடங்கிய அறிக்கை ஒன்றை மந்திரி பெசார் கூட்டமைப்பு தலைமை செயல் அதிகாரி ஃபாகா ஹுசின் நேற்று இரவு வெளியிட்டார்.

அதே வேளையில், ஷா ஆலமில் பிளாசா பெராங்சாங்கில் உள்ள அலுவலகத்தையும், செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் கீழ் மூடப்பட்டதாக அறிவித்தார்.